சிட்னி டெஸ்டில் புஜாரா சதம் - முதல் நாளில் இந்தியா 4 விக். இழப்புக்கு 303 ரன் குவிப்பு!

சிட்னியில் நடைபெறும் 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணித் தரப்பில் லோகேஷ் ராகுல் 9 ரன்களில் அவுட்டானார்.

தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா அபாரமாக விளையாடினார். அரைசதம் கடந்து 77 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அவுட்டானார். தொடர்ந்து கோஹ்லி 23 ரன்களும், ரஹானே 18 ரன்களிலும் அவுட்டாக புஜாரா நங்கூரம் போல் நின்று விளையாடி அபார சதம் விளாசினார்.

5-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த விஹாரி கை கொடுக்க முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா உடனான 71 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டு மண்ணில் தொடரை வென்ற சாதனையை இந்தியா படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>