சென்னை சரவணபவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை ரெய்டு
சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் நடிகர் புனிதர் ராஜ்குமார் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் வருமனா வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
அதேபோல தமிழகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சரவண பவன் ஹோட்டல் இயக்குநர்களின் வீடுகள், அலுவலகன்கள், அஞ்சப்பர் குழுமம், ஹாட் பிரண்ட் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகியவற்றுக்கு சொந்தமான மொத்தம் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்,
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனையால் உணவகங்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை/