திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்த பூண்டி கலைவாணன் - உதயநிதி பெயரிலும் மனு!
திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். உதயநிதி போட்டியிடவும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து இன்றும் நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் விருப்ப மனு கொடுத்தார்.
பூண்டி கலைவாணன் போட்டியிட வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் 10 பேர் விருப்ப மனு அளித்தனர். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் நாளை மாலை வரை மனுக்கள் பெறப்படுகிறது. மனுக்கள் மீது நாளையே பரிசீலிக்கப்பட்டு வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.