ஃபோவாய் ஒய்9 (Huawei) ஜனவரி 7-ல் அறிமுகம்!

'இளந்தலைமுறைக்கான போன்' என்றே தனது ஒய்9 ஸ்மார்ட் போனை ஃபோவாய் நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. பின்புறம் கவர்ச்சிகரமான 3டி ஆர்க்குடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விரல்ரேகையை கடவுச்சொல்லாக பயன்படுத்த உணரி எனப்படும் சென்ஸாரும் பின்புறம் உள்ளது.

ஜனவரி 7ம் தேதி திங்கள்கிழமை புதுடெல்லியில் நடைபெற இருக்கும் அறிமுக விழாவில், ஃபோவாய் ஒய்9 விற்பனைக்கு வரும் நாளும் விலையும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.5 அங்குலம் FHD நாட்ச் உடன் 1080X2340 பிக்ஸல் தரம்.

இயக்கவேகம்: 6 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி

காமிரா: 16 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு காமிராக்கள் முன்புறம் உள்ளன.

13 எம்பி ஆற்றல் கொண்ட முதனிலை மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டாம் நிலை என்று இரண்டு காமிராக்கள் பின்புறம் உள்ளன.

பேட்டரி: 4000 mAh மின்கல ஆற்றல்.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான EMUI 8.2கேமிங் என்னும் விளையாட்டுக்கு உதவும் வண்ணம் டர்போ (turbo) வசதி கொண்ட ஃபோவாய் ஒய்9, மிட்நைட் பிளக், சஃபையர் புளூ மற்றும் கிரேடியண்ட் அரோரா பர்ப்பிள் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

More News >>