நாம் தமிழர் பாசறை கனடாவின் தை பொங்கல் திருவிழா
நாம் தமிழர் பாசறை கனடா நடத்தும் தை பொங்கல் திருவிழா வரும் 13ம் தேதி கோலாகலமாக கனடாவில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கும் இடங்களில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்குறிப்பாக, அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், கனடாவில் அமைந்துள்ள நாம் தமிழர் பாசறை கனடா என்ற தமிழ் அமைப்பு சார்பில் தை பொங்கல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 13ம் தேதி தை பொங்கல் திருவிழா Magestic palace, 12340 Board road, NorthWest, Edmontan Canada என்ற இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.