ரோஹித் சர்மாவுக்கு புரமோஷன்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தந்தையாகியுள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
ரோஹித் சர்மா - ரித்திகா திருமணம் 2015ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது. அத்தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் இதை பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் அவர் இந்தியா திரும்பியிருப்பதால் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விளையாடவில்லை. ஏற்கனவே காயம் காரணமாக ரோஹித் மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை.
ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12ம் தேதி தொடங்கும் நிலையில், ரோஹித் சர்மா ஜனவரி 8ம் தேதி மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தெரிகிறது.கங்கிராட்ஸ், அப்பா ரோஹித்!