சிட்னி டெஸ்டில் வெளுத்து வாங்கிய ரிஷப் பான்ட் - இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன் குவித்து டிக்ளேர்!

சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் அதிரடியாக விளாசி ஆட்டமிழக்காமல் 159 ரன் குவித்தார். இரு அணிகளுக்கும் இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்கு 303 ரன் குவித்தது. அபாரமாக ஆடி சதம் கண்ட புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து 7 ரன்களில் இரட்டை சதம் வாய்ப்பை இழந்தார்.

இதன் பின்னர் ரிஷப் பாண்ட் - ஜடேஜா ஜோடி ஆஸி பந்து வீச்சை சிதறடித்து இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. ரிஷப் பாண்ட் அதிரடியாக சதம் கடந்து 159 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் என்ற நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது. ஜடேஜா 81 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிட்னி மைதானத்தில் இந்தியா எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2004ல் இந்திய அணி 7 விக். இழப்பிற்கு 705 ரன் குவித்திருந்தது.

இந்தப் போட்டியில் இந்தியா 622 ரன் குவித்ததால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வென்றால் 3 - 1 என்ற கணக்கில் வென்று இரு அணிகள் இடையிலான 71 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி. மண்ணில் தொடரை வென்ற சாதனையை இந்தியா படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>