சசிகலா விவகாரம் பரப்பன அக்ராஹார சிறையில் இருந்த 32 கைதிகள் ட்ரான்ஸ்ஃபர்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா தற்போது பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் பல்வேறு வசதிகள் பெறுவதற்காக,சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயணராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றஞ்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இருவருமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைக் கைதிகளுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால்,பரப்பன அஹ்ரஹார சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரவு ஒரு மணியளவில் பெல்லாரி, பாலகவி ஆகிய சிறைகளுக்கு அவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். கர்நாடக மாநில ஐ.ஜி சிறைத்துறை டி.ஜி.பிக்கு 4 வாரங்களுக்குள் இது குறித்த விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

More News >>