ஆல் இந்தியா ரேடியோ வுக்கும் மூடுவிழா - மோடி அரசு பகீர் முடிவு?

அகில இந்திய வானொலியையும் படிப்படியாக மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டதாக தெரிகிறது.

இதன் முதற்கட்டமாக திருவனந்தபுரம், ஹைதராபாத், அலகாபாத், லக்னோ, ஷில்லாங் ஆகிய இடங்களில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களின் மண்டல அலுவலகங்கள் மூடப்படுகிறது. பெரும் நஷ்டத்தை காரணம் காட்டி சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து படிப்படியாக மொத்தமாகவே வானொலி நிலையங்களுக்கு மூடு விழா நடத்தப்படும் என்கின்றன டெல்லி தகவல்கள். அதிவேக விஞ்ஞான வளர்ச்சியால் தந்தி சேவை சில ஆண்டுகளுக்கு முன் அடியோடு நிறுத்தப்பட்டது.

தபால் துறையும் தள்ளாடுகிறது. போதிய வரவேற்பு இல்லாததால் ஆல் இந்தியா ரேடியோவுக்கும் இந்தக் கதியாகிவிட்டது.

More News >>