திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளர் எஸ். காமராஜ் ஜன.8-ல் வேட்பு மனுத்தாக்கல் - டிடிவி தினகரன்
திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 28-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் அமீது போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து தஞ்சாவூரில் அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில், திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்தார்.
மேலும் வரும் 8-ந் தேதியன்று காமராஜ் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்றும் தினகரன் கூறினார்.