ஜன.10-ல் பேட்ட- விஸ்வாசம் மோதல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் அஜித் நடிப்பில் திரைக்கு தயாராக இருக்கும் விஸ்வாசம் படம் ரிலீஸ் தேதி அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில், அஜித், நயன்தாரா நடித்து திரைக்கு தயாராக உள்ள படம் விஸ்வாசம். விவேக், தம்பி ராமைய்யா, யோகி பாபு, ரோபோ சங்கர உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஏற்கனவே, ரஜினியின் பேட்ட படம் வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்வாசம் படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் பொங்கலுக்கு ரிலீசாகும் என்றே படக்குழுவினர் அறிவித்து வந்தனர்.
இந்நிலையில், விஸ்வாசம் படமும் வரும் 10ம் தேதி ரிலீசாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பேட்ட மற்றும் விஸ்வாசம் மோதல் உறுதியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் மற்றும் தலயின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.