திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டி
’கேங் வாராக’ உருவெடுக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் 'மணல்மேடு சங்கர்’ கோஷ்டி!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூண்டி கலைவாணன் தற்போது திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.
திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி நடைபெறுகிறது. திமுக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்றும், இன்றும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விருப்ப மனு கொடுத்தோர்களிடம் நேர்காணல் நடத்தப் பட்டது. இதன் முடிவில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் பூண்டி கலைவாணன்.