அமெரிக்காவில் ஆக்வாமேன் படம் பார்த்து ரசித்த கேப்டன்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் ஆக்வாமேன் என்ற ஆங்கில படத்தை பார்த்த சந்தோஷ தருணத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2ம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் பிரேமலதாவும் சென்றுள்ளார். அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, விஜயகாந்த் தான் எடுத்து மகிழ்ந்த சில புகைப்படங்களை அவ்வபோது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், மனைவி பிரேமலதாவுடன் கேப்டன் விஜயகாந்த் திரையரங்கம் சென்று படம் பார்த்துள்ளார். ஆக்வாமேன் என்ற ஆங்கில படத்தை நேற்று ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த புகைப்படத்தை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More News >>