பேட்ட படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் இன்று முதல் ஆரம்பம்
வரும் 10ம் தேதி ரிலீசாகவுள்ள பேட்ட படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
2.0 படத்திற்கு பிறகு ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபு சிம்ஹா, இயக்குனர் சசிகுமார் உள்ளிட்டோர் பேட்ட படத்தில் நடித்துள்ளனர். வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் ரிசர்வேஷன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பேட்ட படத்தை முதல் நாள் ஷோ காண்பதற்காக ரசிகர்கள் அனைத்து தியேட்டர்களிலும் அலைமோதுகின்றனர்.