இன்னும் 2 நாட்களுக்கு உறைபனி நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
மலை சார்ந்த பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறைபனி நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதம் தொடங்கியது முதல், குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, நீலிகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலை சார்ந்த பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு உறைபனி நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறைபனி எதிரொலியால், மக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் வருவது கூட தெரியாமல் பனி படர்ந்து வருகிறது. இதனால், சாலை விபத்துகளும் ஏற்படுகிறது.