லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டி: நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.
நடிப்பில் இருந்து அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் பிரகாஷ் ராஜ் தான் லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும், எனது புதிய பயணத்திற்கு ஊக்கமும், வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் போட்டி தொடர்பான மற்ற விவரங்களை விரைவில் ஊடகங்கள் மூலம் வெளியிடுவேன் என்றும் அதில் குறிப்பிட்டிள்ளார்.