ldquoசீதக்காதிrdquo பர்ஸ்ட்லுக்கில் அசர வைக்கும் விஜய் சேதுபதி
வயதான கதாப்பாத்திரத்தையும் துணிந்து ஏற்று நடிக்கக்கூடிய ஒரே நடிகர் விஜய்சேதிபதி தான். ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் சீதக்காதி என்ற படத்தில் வயதாக தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியி பிறந்த நாளை முன்னிட்டு சீதக்காதி படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துகள் கூறி இந்த பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இதில், விஜய்சேதுபதி கிட்டத்தட்ட ஒரு 80 வயது முதியவர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. ஒரு பழைய மர நாற்காலியில் கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் ஸ்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.