சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி பாலோ ஆன் - வெற்றிப்யாதையில் இந்தியா !

சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 - வது மற்றும் கடைசிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி.அணி 3-ம் நாளான நேற்று தேநீர் இடைவேளைக்குப் பின் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து தத்தளித்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

நான்காவது இன்றும் மழையால் போட்டி தாமதமாகி, உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கியது. 236 ரன்களுடன் மேற்கொண்டு 64 ரன்கள் சேர்ப்ப்தற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியத் தரப்பில் சுழலில் மாயாஜாலம் காட்டிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளையும் பும் ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனால் 322 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடி வருகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ?ஆள்திரேலியா என்ற நிலை உள்ளது. இந்த டெஸ்டில் வென்று தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றும் பட்சத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 71 ஆண்டு கால டெஸ்ட் சரித்திரத்தில் முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றிய சாதனை படைக்க உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>