மறைந்த 5 ரூபாய் டாக்டரின் உருவ படத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை
40 ஆண்டுகாலமாக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மறைந்த டாக்டர் ஜெயசந்திரனின் உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 ஆண்டுகளாக வெறும் ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயசந்திரன் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டாக்டர் ஜெயசந்திரனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறைந்த டாக்டர் ஜெயசந்திரனின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.