மக்களவையில் இன்றும் அமளி - மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்!
மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டதால் கடந்த புதன்கிழமை அதிமுக எம்.பி.க்கள் 25 பேரும், வியாழனன்று 7 பேரும் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவையில் எஞ்சியுள்ள அதிமுக எம்.பி.க்களில் வேணுகோபால், செங்குட்டுவன், ராமச்சந்திரன் ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எச்சரிக்கை விடுத்த பின் மூவரையும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.