பேருந்து மீது கல்வீசிய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை - ஜாமீன் தந்தது கோர்ட்!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி!

பாஜக டூ மன்னார்குடி மாஃபியா- பாலகிருஷ்ணா ரெட்டியின் பயோடேட்டா !

பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நிலையில் உடனே ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டில் கிருஷ்ணகிரியில் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் பா.ஜ.க.வில் இருந்தார்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் நடந்து வந்தது. எம்.எல்.ஏ.வாகி அமைச்சராகவும் பாலகிருஷ்ண ரெட்டி பொறுப்பேற்றதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பிக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து 2-வது அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். 3 ஆண்டு தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை உடனடியாக பாலகிருஷ்ணா ரெட்டி இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் தார்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் பால கிருஷ்ணா ரெட்டிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் கொடுத்து தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இத்தீர்ப்பு குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூறுகையில், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நாளையே மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு திமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டது என்றும் மேல்முறையீட்டில் நீதி கிடைக்கும் என்றும் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

More News >>