அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பாலகிருஷ்ண ரெட்டி!
நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
1998-ல் பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார் பாலகிருஷ்ணா ரெட்டி.