ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு - அமைச்சர் தங்கமணி உறுதி!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் என சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு தான் அரசின் நிலைப்பாடும் என்றார். மேலும் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.