ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட உயர் கல்வித்துறை செயலர் - கைது வாரண்ட் ரத்து!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் கைது வாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி மையத்திற்கு உயர்நீதிமன்ற தடையை மீறி செனட் ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக தனியார் கல்லூரிகள் தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆஜராகாததால் அவரை கைது செய்து 9-ந் தேதி ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் நீதிபதி கிருபாகரன் முன் மங்கத்ராம் சர்மா நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார்.

இதைத் தொடர்ந்து மங்கத்ராம் சர்மாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ரத்து செய்தார். தொலைத்தூர கல்வி மையத்திற்கு அனுமதி வழங்கிய செனட் கூட்ட நிகழ்வுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி கிருபாகரன் ஒத்தி வைத்தார்.

More News >>