கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை களமிறக்க துடிக்கும் அதிமுக- ரூ100 கோடி கேட்டு அடம்பிடிக்கும் சரத்குமார்!

லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து நடிகை ராதிகாவை களமிறக்க விரும்புகிறது அதிமுக. ஆனால் தாம் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுவதாகவும் தேர்தல் செலவுக்கு ரூ100 கோடி தர வேண்டும் என சரத்குமார் பேரம் பேசுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக பணிகளை பல மாதங்களுக்கு முன்னரே கனிமொழி தொடங்கிவிட்டார். கனிமொழியை தோற்கடிக்க அதிமுக தரப்பு இப்போதே முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

முதலில் சரத்குமாரை கனிமொழிக்கு எதிராக நிறுத்த அதிமுக தரப்பு விரும்பியது. சரத்குமாரோ, தாம் தூத்துக்குடியில் போட்டியிட தயார்; ஆனால் 100 கோடி ரூபாய் செலவுக்கு பணம் தேவை என பேரம் பேசியுள்ளார். மேலும் கொங்கு பெல்ட்டில் தமது கட்சிக்கு 1 தொகுதி வேண்டும் எனவும் அடுத்த பேரத்தையும் பேசியிருக்கிறார்.

இதில் கடுப்பாகிப் போன அதிமுக தரப்பு, கனிமொழிக்கு எதிராக ராதிகாவை நிறுத்துங்கள்; நீங்கள் கேட்டதில் 50% தேர்தல் செலவுக்கு தருகிறோம் என கறாராக கூறிவிட்டதாம். ஆனால் கனிமொழியை எதிர்த்து களம் இறங்க ராதிகா இப்போதைக்கு தயாராக இல்லை என கூறி வருகிறாராம் சரத்குமார்.

- எழில் பிரதீபன்

 

More News >>