மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்!
மகளிர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக திருநங்கை ஒருவர் அகில இந்திய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பத்திரிகையாளராகவும், சமூக ஆர்வலராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் அப்சரா ரெட்டி. தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்றவர்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்ட . அப்சரா ரெட்டி கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாளராக செயல்பட்ட அப்சரா ரெட்டி சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில் அப்சரா ரெட்டியை மகளிர் காங்கிாஸ் பொதுச் செயலாளராக ராகுல் காந்திநியமித்துள்ளார். ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அப்சரா ரெட்டி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவி ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தகவலை தெரிவித்துள்ளார்.