உ.பி.யில் காங்கிரசை குறைச்சு மதிப்பிடாதீங்க... மாயாவதி அகிலேஷூக்கு ராகுல் எச்சரிக்கை!
உ.பி.யில் காங்கிரசின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கருத வேண்டாம் என்று பகுஜன், சமாஜ்வாதி கட்சிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். இதையொட்டி கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், உ.பி.யில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த முறை அதிசயத்தக்க வகையில் வெற்றி பெறுவோம்.
வரும் தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதே குறிக்கோள். காங்கிரஸ் பலமாக உள்ள மாநிலங்களில் பா.ஜ.க.வை எளிதில் வீழ்த்துவோம். பிற மாநிலங்களில் செல்வாக்கு படைத்த கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கூட்டணி உறுதியாகிவிட்டது. உ.பி.யிலும் கூட்டணிக்கான வாய்ப்பு நீடிக்கிறது. இந்த முறை உ.பி.யில் காங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம். செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதிசயத்தக்க வகையில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார் ராகுல் காந்தி.