திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் -தரையில் அமர்ந்து குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின் !
திருவாரூரில் திமுக சார்பில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார் .
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற மூன்று முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 13 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.
இன்று காலை திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திரளாக திரண்டிருந்த கிராம மக்களுக்கு மத்தியில் தரையில் அமர்ந்து அந்த ஊர் மக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கினார்.