அந்நியச் செலாவணி மோசடி வழக்கு - சசிகலா நேரில் ஆஜராக உத்தரவு!
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ம் தேதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா மீதான அந்தியச் செலாவணி மோசடி வழக்கு சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி மலர்விழி முன் நடந்த இவ்வழக்கில், சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாலும், எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாததால் வரும் 28-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி மலர் விழி உத்தரவிட்டார்.