பிரகாஷ் ராஜ் பாஜக தாக்கி பேசியதால் மேடையை கோமியத்தால் சுத்தம்!
நடிகர் பிரகாஷ் ராஜ் பொதுமேடையில் பாஜகவை தாக்கிப் பேசியதை அடுத்து பாஜகவினர் மேடையை மாட்டு கோமியத்தால் சுத்தம் செய்துள்ளனர்.
சமீபகாலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நடந்துமுடிந்த குஜராத் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், “நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும்... 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிர்சி பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை தாக்கிப் பேசினார்.
இதனையடுத்து, பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்சாவை சேர்ந்த வாலிபர்கள், மாட்டு கோமியத்தால் பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை சுத்தம் செய்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள இளைஞர் அமைப்புகள், ”சிர்சி பகுதி மிகவும், புனிதமானது. ஆனால், தீய சக்திகள் இந்த மேடையில் பேசியதால் புனிதன் கெட்டுப் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளனர்.