10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10% சதவீத ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் சட்டத் திருத்த மசோதாவையும் நிறைவேற்றி விட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து கெளசால்காந்த் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
50% மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மீறுவதாக இந்த இட ஒதுக்கீடு உள்ளது.சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கும் இந்த இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.