பாலிவுட் இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி - செல்பி எடுத்து உற்சாகம்!
பாலிவுட் இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட கலக்கல் "செல்பி" வெளியாகி வைரலாகியுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தலைமையில் பாலிவுட்டின் முன்னணி இளம் நட்சத்திரங்களான ரன்வீர்சிங், அலியாபட், ரன்பீர் கபூர், வருண் தவான், ராஜ்குமார் ராவ் , ஆயுஷ்மான் குரானா,புமி பெத்னே சர், சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌசால், ஏக்தா கபூர், ரோகித் ஷெட்டி, அஸ்வினி ஐயர் ஆகியோர் இன்று பிரதமரை சந்தித்தனர். அப்போது இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி உற்சாகச் சிரிப்புடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்தப் படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் இயக்குநர் கரண் ஜோஹர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. திரைத்துறைக்கு ஜி.எஸ்.டி.யில் சலுகை வழங்கியதற்கு அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம் என்றும் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.