ரபேல் விவகாரத்தில் மோடிக்கு பயம் வந்து விட்டது.... தூக்கமே இருக்காது .... ராகுல் காந்தி கிண்டல்!
சுற்றிச் சுழன்றடிக்கும் ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ரொம்பவே பயம் வந்து விட்டது.
அவருக்கு தூக்கமே வராது என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை 2-வது முறையாக தூக்கியடித்தது குறித்து ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அதில், ரபேல் விவகாரத்தில் மோடியின் மனதில் ரொம்பவே பயம் சுழன்றடிக்கிறது.
ரபேல் விமானப் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை அவருடைய நண்பர் அனில் அம்பானியின் பாக்கெட்டில் சேர்த்து விட்டார். அலோக் வர்மாவை இருமுறை தூக்கியடிக்கவும் ரபேல் பயமே காரணம். அடுக்கடுக்கான பொய்களால் சிறைக் கைதி போல் தவிக்கும் மோடிக்கு தூக்கமே போச்சு என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.