பிச்சைக்காரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ரூ. 500 - மாநில அரசு அதிரடி
பிச்சைக்காரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ரூ 500 பரிசு என தெலங்கான மாநில காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹைதராபாதில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டே முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இது ‘பிச்சைக்காரர்கள் அற்ற மாநில’த்தை உருவாக்குவது குறித்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பிச்சைக்காரரைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் பரிசு என காவல்துறை அறிவித்தது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் சிக்கியதால் சன்சல்குடா, சரப்பள்ளி சிறைகள் நிரம்பி வழிகின்றன. இதுவரை 8 பேர் பிச்சைக்காரர்களை பிடித்துக் கொடுத்தாக பணம் கேட்டு முறையிட்டுள்ளனர்.
சிறையில் அவர்களை தனித்தனியே அடைத்து வைத்திருப்பதாகவும், பிச்சைக்காரர்களின் குடும்பத்தினர் தலையிட்டு சிலரை விடுவித்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது முறையாக பிச்சைக்காரர்கள் சிக்கினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
இது குறித்து கூறியுள்ள காவல் ஆய்வாளர் நரசிம்மன், “கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிச்சைக்காரர்கள் மேலான நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். இரண்டு வகையான சிறைச்சாலைகள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. ஆண் பிச்சைக்காரர்களுக்கு சன்சல்குடா சிறையும், பெண் பிச்சைக்காரர்களுக்கு சரப்பள்ளி சிறையும் ஒதுக்கப்பட்டு உள்ளன” என்றார்.