பொதுத் தேர்தலுக்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ... தேர்தல் தேதி குறித்து ஆணையம் முக்கிய ஆலோசனை!
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டது மத்திய தேர்தல் ஆணையம்.
முதற்கட்டமாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் ஆலோசனை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் தேதிகளை முடிவு செய்வதற்காக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்தில்தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அநேகமாக தேர்தல் பற்றிய அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.