தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு !
3 வருட சிறைத்தண்டனை பெற்று அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
1998-ல் நடந்த பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் கடந்த வாரம் சென்னை சிறப்பு நீதிமன்றம் பால கிருஷ்ணா ரெட்டிக்கு 3 வருட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் அமைச்சர் பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக பறிபோனது.
தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். அப்போது நீதிபதி பார்த்திபன், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.