ஸ்ரீதேவியின் பயோபிக் விரைவில்.. போனி கபூர் அறிவிப்பு
பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அவரது கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த இவர் பிறகு, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவுக்காக துபாய் சென்றபோது, அங்கு தங்கி இருந்த ஓட்டலில் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார் ஸ்ரீதேவி. இவரது இறப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் பயோபிக் படம் இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் உருவாக்க உள்ளதாகவும், ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகையை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.