இளையராஜா 75 - 2 நாட்கள் பிரம்மாண்ட திரை கொண்டாட்டம்! (வீடியோ)
இசைஞானி இளையராஜாவின் 75வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் திரை அனுபவத்தை கொண்டாடும் வகையில் தமிழ் திரைப்பட மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட விழவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா மற்றும் அவரது இசை பயணத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் பிரம்மாண்ட திரை கொண்டாட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதி நடைபெறுகிறது. ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை 5 மணி முதல் 10 மணி வரையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் முதல் நாளான பிப்ரவரி 2ம் தேதி முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இசைஞானியின் பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.
தொடர்ந்து 2ம் நாளில், இசைஞானி இளையராஜா மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பில் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்க சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் டிக்கெட் புக்கிங்கான வழிமுறை குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், இளையராஜா 75 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.