கழுகு-2 படத்தில் குத்தாட்டம் போடும் யாஷிகா.. வீடியோ பாடல் ரிலீஸ்
கிருஷ்ணா நடிக்கும் கழுகு-2 படத்தில் இடம்பெறும் பாடலின் வீடியோ ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில், நடிகர் கிருஷ்ணா நடித்து கடந்த 2012ம் ஆண்டில் வெளிவந்த படம் கழுகு. பிந்து மாதவி, தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, கழுகு படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சத்தியசிவா முடிவு செய்தார். இந்நிலையில், காமெடி த்ரில்லர் படமாக கழுகு&2 உருவாகியுள்ளது. இந்த படத்தில், நடிகர் கிருஷ்ணா, நடிகை பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
கழுகு படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலின் வீடியோ வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.