அதிமுகவின் அதிகாரப்பூர்வ புதிய நாளேடு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியீடு!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நமது அம்மா நாளிதழ் வெளிவர இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது எம்.ஜி.ஆர். இருந்தது. அவரது மறைவிற்கு பின் கட்சி இரண்டாக மாறியுள்ளது. மேலும், இந்த நாளிதழின் நிர்வாகிகளா சசிகலா உறவினர்களே இருக்கிறார்கள்.
இதனால், ஓ.பிஎஸ். மற்றும் ஈ.பி.எஸ். குறித்தான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து தங்களது அணிக்கென தனி இதழ் தொடங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ல் நமது அம்மா நாளிதழ் அதிமுக நாளிதழாக வெளிவருகிறது. மேலும், தங்களுக்கென தனி தொலைக்காட்சி தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.