மன்மோகன் சிங் ஆக்சிடென்ட் பிரதமர் இல்லை ... டிசாஸ்டிரஸ் பிரதமர் : மம்தா விமர்சனம்!
மன்மோகன்சிங் பற்றிய "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" படத்திற்கு "டிஸாஸ்டிரஸ்" பிரைம் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்த காலத்திய சம்பவங்கள் அடிப்படையில் "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்"திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளைக் கடந்து வெளியான இந்தத் திரைப்படம் குறித்து மம் தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
நம் நாட்டில் பிரதமராக வந்தவர்களில் பலரும் எதிர்பாராத ஆக்சிடென்டாக வந்தவர்கள் தான். மன்மோகன் படத்திற்கு டிஸாஸ்டிரஸ் (பேரழிவு) பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி.