கொடநாடு கொலைகள் விவகாரம்- விஸ்வரூபத்தின் பின்னணியில் அமித்ஷா- தினகரன்?

கொடநாடு கொலைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதன் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் கூட்டாக செயல்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.

சென்னை வந்திருந்த அமித்ஷாவை தினகரன் சந்தித்து பேசினார். சர்ச்சைக்குரிய உச்சநீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமாவரின் இல்லத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதில், அமமுகவை அதிமுகவில் இணைத்தே ஆக வேண்டும் என தினகரனிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தினகரனோ, தாம் இணைய தயாராக இருக்கிறேன்... ஆனால் எடப்பாடிதான் ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது, சசிகலாவை கூட நாங்கள் சேர்த்து கொள்கிறோம்.. தினகரனை ஏற்கனவே திட்டவட்டமாக கூறியது போல் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்.

அப்படி தினகரனை அனுமதித்தால் மீண்டும் ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக போய்விடும். அது யாருக்குமே நல்லதும் அல்ல என காட்டமாக கூறியிருக்கிறார். டெல்லி பாஜக மேலிடமோ எட்ப்பாடியின் கறார் போக்கை ரசிக்கவில்லை.

இதையடுத்தே பத்திரிகையாளர் மேத்யூஸ் மூலமாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க கொடநாடு கொலைகள் குறித்த ஆவணப்படம் வெளியாகி இருக்கிறதாம். இதனைத்தான் இந்த ஆவணப்படத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தமக்கு தெரியும் என காட்டமாக கூறினாராம் எடப்பாடி பழனிசாமி.

-எழில் பிரதீபன்

 

More News >>