கொடநாடு கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் டெல்லியில் கைது

கொடநாடு எஸ்டேட் கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரது கார் ஓட்டுநர் கனகராஜ் தலைமையிலான கேரளா கூலிப்படை கொள்ளையடித்தது. அப்போது கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கனகராஜ், கொடநாடு சிசிடிவி ஆபரேட்டர் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர். அதேபோல் சயனின் குடும்பத்தினர் காரில் செல்லும் போது விபத்தில் சிக்கி அவரது மனைவி, மகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த மர்மங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மேத்யூஸ் புலனாய்வு செய்து ஆவணப்படமாக வெளியிட்டார். மேலும் கனகராஜின் கூட்டாளிகள் சயன், மனோஜ் இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் முக்கிய ஆவணங்களை எடுத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர்.

இது தமிழக அரசியல் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் இந்த குற்றச்சாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்தும் இருக்கிறார். மேலும் மேத்யூஸ், சயன், மனோஜ் மீது சென்னை போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்தான் சயன், மனோஜ் இருவரையும் தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேத்யூஸ் வெளியிட்டுள்ள வீடியோ:

 

More News >>