இந்தியாவுக்கு தை பிறந்து ஆட்சி மாற்றம் நடக்கும்: திருநாவுக்கரசர்
தை திருநாள் பிறந்ததையட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று தை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், "தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற முதுமொழி. தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட தை முதல் நாளை, தமிழர்கள் திருநாளாகக் கொண்டாடப்படுவது தமிழ் மக்களுக்கு பெரும் சிறப்பாகும். இந்த ஆண்டு இந்தியாவுக்கு தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.