காஞ்சனா 3 மோஷன் பிக்சர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராகவா லாரன்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும், காஞ்சனா 3 திரைப்படத்தின் மோஷன் பிக்சர் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் காஞ்சனா 3. ஏற்கனவே, முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததை அடுத்து, காஞ்னா 3 படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.திகில் படமான காஞ்சனா 3யை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 2017ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காஞ்சனா 3 படத்தின் மோஷன் பிக்சர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.