பிக்பாஸ் பிரபாசுடன் இணைத்து அவதூறு.. பின்னணியில் சந்திரபாபு நாயுடு சதி..ஒய்.எஸ்.ஆர் மகள் புகார்!
பிக்பாஸ் நடிகர் பிரபாசுடன் தம்மை இணைத்து அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா போலீசில் புகார் செய்துள்ளார்.
தாம் இதுவரை பிரபா ஸை நேரில் சந்தித்த தோ, பேசியதோ கிடையாது. உண்மைக்கு மாறாக பிரபாசுடன் இணைத்து களங்கப்படுத்தி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்படுகிறது.
இதன் பின்னணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சதி இருப் பதாகச் சந்தேகம் உள்ளது. தமது தந்தை ஒய்.எஸ்.ஆர்.மீதும் சகோதர் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் இதற்கு முன்னர் சந்திரபாபு அபாண்டமாக பழி சுமத்தினார்.
தற்போது தேர்தல் வர உள்ள நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் வளர்ச்சியை தடுக்க இவ்வாறு அவதூறு பரப்பப்படுகிறது என ஐதராபாத் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.