மக்களவைத் தேர்தல்.. பா.ஜ.கவினருக்கு 12 கேள்விகள்.. நமோ ஆப் மூலம் மோடி சர்வே!
வரும் மக்களவைத் தேர்தலில் சாதக, பாதகங்கள் குறித்து பா.ஜ.க தொண்டர்களிடம் "நமோ ஆப்" மூலம் சர்வே எடுக்கிறார் மோடி.
இது குறித்து தமது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் 30 வினாடிகளுக்கு பேசி வீடியோ ஒன்றை மோடி வெளியிட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? தற்போதைய ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கருத்து, தற்போது உங்கள் தொகுதி எம்.பி.யின் செயல்பாடு எப்படி? உங்கள் தொகுதியில் பா.ஜ.க.வில் வேட்பாளருக்கு தகுதியான 3 பிரபலங்களின் பெயர் என்பது போன்ற 12 கேள்விகளை கேட்டுள்ளார் மோடி.
இந்தக் கேள்விகளுக்கு "நமோ ஆப்" பில் பதிலளிக்குமாறும், தொண்டர்களின் பதிலால் வரும் தேர்தலில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று பா.ஜ.க தொண்டர்களிடம் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.