சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

சில குழந்தைகளுக்கு மதியம் பொரியல் இல்லை என்றால் சாப்பிடவே தோன்றாது. அதுக்காக தினமும் உருளை கிழங்கு, போன்றவை கொடுத்தாலும் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். இதனால் சத்துமிக்க பொரியலை கொடுக்க வேண்டுமா?? அப்போ வாரம் ஒரு முறை குடைமிளகாய் பொரியலை செய்து கொடுங்கள். இதனால் உடலில் ஈரப்பதமும் அதிகரிக்கும். சரி வாங்க குடைமிளகாய் பொரியல் எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
குடைமிளகாய் - 2
தக்காளி - 3
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.

You'r reading சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உடலுக்கு ஆரோக்கியம் தரும் துளசி டீ செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்