கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?

அடுத்த வாரம் கூகுள் பே செயலியில் பயனர்களுக்கு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளன. பயனர்கள் தங்கள் கணக்கில் தனிப்பட்ட முறையில் தகவல்களை சேமிக்க இது உதவும். கூகுள் பேயின் புதிய வடிவை மேம்படுத்தும்போது, எல்லா பயனர்களும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த விரும்புகிறார்களா, இல்லையா என்று கேட்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ”பர்சனலைசேஷன் வித்இன் கூகுள் பே" என்ற வசதியை ஆன் செய்தால் புதிய கட்டுப்பாடுகளை பயனர் செயல்படுத்த முடியும்.

அதற்கேற்ப சலுகைகள் மற்றும் பரிசுகளை பற்றிய அறிவிப்புகள் பயனருக்கு காட்சியளிக்கும். பரிவர்த்தனை விவரங்களையும் பயனர்கள் அழிக்கலாம்; சேமிக்கலாம். தனிப்பட்ட விவரங்களை சேமிக்காமல் இப்போதைய பயன்பாட்டையே தொடர விரும்புபவர்கள் அதை தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் யாருடனும் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேம்பட்ட வடிவத்தில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமிருப்பில் பரிவர்த்தனை விவரங்கள் அழித்துக்கொள்ளும் வசதி உண்டு என்பது புதிய தகவலாகும்.

You'r reading கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோடைக்காலத்தில் சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்