44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்

எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2,000/- கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ரூ.3,000/- ஆகியவை உள்ளிட்ட பல சலுகைகளுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஆர்க்டிக் ஒயிட், டஸ்க் புளூ மற்றும் சன்செட் டாஸில் நிறங்களில் விற்பனைக்கு ஆயத்தமாக உள்ள இந்த போனுக்கான முன்பதிவு இன்று (ஏப்ரல் 29)முதல் தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார் மற்றும் விவோ இந்தியா இணையதளங்களிலும் ரிலையன்ஸ் டிஜிட்டல், கிரோமா, விஜய் சேல்ஸ், பூர்விகா, சங்கீதா மொபைல்ஸ் மற்றும் பிக் சி போன்ற விற்பனை நிலையங்களிலும் இது விற்பனையாகும்.

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை (நானோ) சிம்கள்
தொடுதிரை: 6.44 அங்குலம் எஃப்எச்டி (1080X2404 பிக்ஸல் தரம்) AMOLED
ரெப்ஃரஷ் விகிதாச்சாரம்: 90Hz
செல்ஃபி காமிரா: 44 எம்பி ஆற்றல் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ஆற்றல் (டிரிபிள் ரியர் காமிரா)எல்இடி பிளாஷ் மற்றும் ஓஐஎஸ் தொழில்நுட்பம்
பிராசஸர்: ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11; ஃபன்டச் ஓஎஸ் 11.1
மின்கலம்: 4000 mAh

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், இன்டிஸ்ப்ளே விரல்ரேகை உணரியுடன் கூடிய 8 ஜிபி + 128 ஜிபி போன் ரூ.29,999/- விலையிலும் 8 ஜிபி + 256 ஜிபி போன் ரூ.32,990/- விலையிலும் கிடைக்கும்.

You'r reading 44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்